• Mon. Nov 17th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

ஊரடங்கில் அவசர உதவிக்கு! – சென்னை காவல்துறையின் அறிவிப்பு!

ஊரடங்கின்போது அவசர உதவி தேவைப்படுவோருக்காக உதவி எண்ணை வெளியிட்டுள்ளது சென்னை காவல்துறை.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வருவதால், இரவுநேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு தற்போது அமலில் உள்ளது. சென்னையில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அங்கு பல்வேறு நடவடிக்கைகளை சென்னை காவல்துறை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், ஊரடங்கின்போது அவசர உதவி தேவைப்படுவோர் காவல்துறை உதவி எண் 100 மற்றும் 112 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என்றும் காவலன் SOS செயலியை பயன்படுத்தலாம் எனவும் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும், கொரோனா ஊரடங்கு குறித்து தகவல்கள் பெறவும், சந்தேகங்களை கேட்கவும், கொரோனா கட்டுப்பாட்டறை உதவி மையம் 94981 81236, 9498181239, 72007 06492 மற்றும் 72007 01843 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் இன்றும் கூறியுள்ளது.