• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

தாய் தந்தையை இழந்த கர்ப்பிணி பெண்ணுக்கு, எம்.எல்.ஏ. அய்யப்பன் வளைகாப்பு செய்து வைத்த சம்பவம் நிகிழ்ச்சி…

ByP.Thangapandi

Nov 6, 2023

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, சேடபட்டி, செல்லம்பட்டி என மூன்று ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள 350 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமூக நலத்துறை சார்பில் சமூக சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன், உசிலம்பட்டி நகர் மன்ற சேர்மன் சகுந்தலா, ஊராட்சி ஒன்றிய சேர்மன் ரஞ்சனி சுதந்திரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு ஆசி வழங்கினார்.

உசிலம்பட்டியில் நடைபெற்ற வளைகாப்பு நிகழ்ச்சியில் தாய் தந்தையை இழந்த கர்ப்பிணி பெண்ணுக்கு எம்எல்ஏ வளைகாப்பு செய்யும் போது திடீரென அழுததைக் கண்ட உசிலம்பட்டி எம்எல்ஏ, தாய் தந்தை இல்லை என எண்ண வேண்டாம் தாய் தந்தையாக நான் இருந்து உனக்கு வளைகாப்பு செய்கிறேன், சுகப்பிரசவம் ஆகும் என அப்பெண்ணுக்கு வளைகாப்பு செய்து வைத்து ஆசி வழங்கியது அவ்விழாவில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.