
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் வைகாசி விசாகப் பெருந்திருவிழாவின்
3_ம் திருநாளான இன்று (ஜுன்_2)யில் தமிழக பாஜகவின் தலைவர் நயினார் நாகேந்திரன் பக்தர்களுக்கு அவருடைய சொந்த செலவில் அன்னதானம் வழங்கினார்.

நயினார் நாகேந்திரன் பங்கேற்ற இந்த நிகழ்வில் அவர்களது கூட்டணி கட்சியான அதிமுக சார்பில் அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர்
தாமரை தினேஷ் பங்கேற்றார்.

தமிழக பாஜக தலைவர் காலையில் சாமிதரிசனத்திற்கு பின். பக்த்தர்களுக்கு உணவு பரிமாறும் நிகழ்வில் பங்கேற்றார். கடந்த பல்லாண்டுகளாக நயினார் நாகேந்திரன். பகவதி அம்மன் கோயில் 3_ம் திருவிழா நிகழ்வை அவரது சொந்த செலவில் ஒவ்வொரு ஆண்டும் செய்து வருவதின் வரிசையில்.
தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் பதவி ஏற்றபின் வரும் முதல் விழாவில் இன்று பாஜக மற்றும் கூட்டணி கட்சியான அதிமுக பிறருடன் பங்கேற்றார்.
