கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழாவை முன்னிட்டு புனித வின்சென்ட் தே பவுல் சபையின் சார்பாக ஆதரவற்றோர் இல்லத்தில் இருப்பவர்களுக்கு உணவும்
கிறிஸ்துமஸ் கேக்கும் வழங்கப்பட்டது.
திருவில்லிபுத்தூர் இயேசுவின் திரு இருதய ஆலயத்தில் செயல்பட்டு வரும் புனித வின்சென்ட் தே பவுல் சபையினர்களின் சார்பாக கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழாவினை முன்னிட்டு திருவில்லிபுத்தூர் சிவகாசி சாலையில் அமைந்துள்ள ஜீவக்கல் அன்பு இல்லத்தில் உள்ள குழந்தைகள், முதியோர்கள், மனநோயாளிகளுக்கு உணவு மற்றும் கிறிஸ்துமஸ் கேக்குகள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் மத்தியசபையின் செயலாளர் பரலோகம், கிளை சபைத்தலைவர் புனிதன், செயலாளர் ராணி, பொருளாளர் மைக்கேல் பீட்டர், முன்னாள் தலைவர் ராஜன் அந்தோணிராஜ், உறுப்பினர்கள் ரஞ்சித்குமார், ஜாக்குலின், கௌசல்யா, கோடி அற்புதா, ஜோஸ்பின் ஆகியோர் கலந்து கொண்டனர்.
