• Sat. Apr 27th, 2024

பறக்கும் படை அதிகாரிகள் திருப்பத்தூர் சாலையில் தீவிர சோதனை

ByG.Suresh

Mar 18, 2024

2024 நாடாளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 19-ந்தேதி நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிப்பை வெளியிட்டது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் வருகிற 20-ந் தேதி தொடங்கும் நிலையில், 27-ந் தேதி வேட்பு மனுதாக்கல் செய்ய இறுதி நாளாகும்.மேலும், 28-ந் தேதி வேட்பு மனுக்கள் ஆய்வு செய்யப்படும். 30-ந் தேதி வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறலாம். தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் மாதம் 4-ந் தேதி நடைபெற இருக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்த நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உடனடியாக தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் பணப்பட்டுவாடாவை தடுக்கவும், அரசியல் கட்சிகள் பொதுமக்களுக்கு வழங்கும் பரிசு பொருட்களை தடுக்கவும் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் சிவகங்கையில் இருந்து திருப்பத்தூர் செல்லும் சாலையில் பறக்கும் படை சிறப்பு தாசில்தார் உமா மகேஸ்வரி தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்இதில் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலானதை தொடர்ந்து வாகனங்களில் முன்புறமுள்ள கட்சி கொடிகளை அகற்ற கூறி வாகன ஓட்டிகளிடம் இன்று காலை சுமார் 11:30 மணியளவில் அறிவுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *