• Sat. Mar 14th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

ஆனைமலையில் சந்தன மரம் வெட்டிய ஐவர் கைது!

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகம், உலாந்தி வனசரகம், டாப்சிலிப், மஞ்சள் போர்டு இடத்தில் மர்ம நபர்கள் நடமாடுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் வந்ததை அடுத்து,ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப்பிரமணியம் உத்தரவின்பேரில் துணை இயக்குனர் கணேசன் அறிவுறுத்தலின்படி அப்பகுதியில் வனச்சரகர் காசிலிங்கம் தலைமையில் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சென்று பார்த்தனர்!

பின் அங்கு மறைந்திருந்து கண்காணித்தபோது வெள்ளை நிற மாருதி காரில் வந்த இரு நபர்கள் வருவதையும் வனப்பகுதியில் இருந்து மூன்று பேர் சந்தன மரத் துண்டுகளை ஏற்றி கடத்த முயற்சித்தது தெரிய வந்தது! அவரை வனத்துறையினர் சுற்றி வளைத்தனர்..

தொடர்ந்து, வனத்துறை அதிகாரிகள் விசாரணை செய்ததில் திருவண்ணாமலை ஜமனாமரத்தூரைச் சேர்ந்த வெங்கடேஷ், முகமது பசீர், மணிகண்டன், சக்கரவர்த்தி என தெரியவந்தது. இவர்களிடமிருந்து ரூபாய் ஒரு லட்சம் மதிப்பில் உள்ள 73 கிலோ சந்தன கட்டைகள் மற்றும் மொபைல் போன், மாருதி 800 கார் பறிமுதல் செய்யப்பட்டது!

பின்னர் சந்தன மரம் வெட்ட மூளையாக செயல்பட்ட தலைமறைவாக உள்ள, கேரள மாநிலம் மன்னார்காடு சேர்ந்த மூசாஹாஜி என்பவரின் மகன் அப்துல் சலீம் என்பவரை தேடி வருகின்றனர். வெங்கடேஷ், அப்துல் சலீம் மீது ஏற்கனவே சந்தன மரம் கடத்தல் வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.