• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பழவேற்காட்டில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை..!

Byவிஷா

Sep 2, 2023

சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல் 1 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளதால், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பழவேற்காட்டில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
பழவேற்காடு அருகே ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரி கோட்டா சதிஷ் தவான் ராக்கெட் ஏவுதளம், அமைந்து உள்ளது. ஒவ்வொரு முறை விண்ணில் ராக்கெட் ஏவப்படும் மற்றும் சோதனை பணிகள் மேற்கொள்ளும் காலங்களில், பாதுகாப்பு கருதியும், அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டும் இந்த பழவேற்காடு பகுதியில், குறிப்பிட்ட சுற்றளவிற்கு மீனவர்கள் மீன் பிடிக்கத் தடை விதிக்கப்படுவது வழக்கமாக உள்ளது.
இன்று காலை 11.50 மணிக்கு ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா சதிஷ் தவான் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து சூரியனை ஆய்வு செய்வதற்காக பி.எஸ்.எல்.வி., -சி 57 ராக்கெட் வாயிலாக ஆதித்யா எல்1 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. எனவே, அதையொட்டி பழவேற்காடு மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கச் செல்ல, மாவட்ட மீன் வளத்துறை தடை விதித்து உள்ளது. இதைக் குறித்த சுற்றறிக்கை பொன்னேரி மீன்வளத்துறை சார்பில், மீனவ கிராமங்களில் உள்ள கூட்டுறவு சங்கத்தினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.