• Thu. Apr 25th, 2024

இந்திய கப்பற்படையின் துப்பாக்கி சூட்டில் காயமடைந்த மீனவருக்கு மதுரையில் சிகிச்சை

Byகுமார்

Oct 21, 2022

துப்பாக்கி சூட்டில் காயமடைந்த மீனவர் மேல் சிகிச்சைக்காக மதுரைஅரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதி பட்டுள்ளார்.
காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த வாரம் கடல் மீன் பிடிப்பிற்காக ஒரு படகில் பத்து மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர்
மீனவர்கள் கோடியாக்கரை ராமேஸ்வரம் இடையே வடக்கு கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்படைக்குச் சொந்தமான கப்பலில் இருந்த கடற்படை வீரர்கள் இன்று அதிகாலை 4 மணிக்கு திடீரென துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கிசூட்டில் காரைக்காலில் இருந்து சென்ற மீன் பிடி படகின் மீது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தது.
இதில் படகில் இருந்த மயிலாடுதுறை வானகிரி பகுதியை சேர்ந்த மீனவர் வீரவேல் (30) என்பவருக்கு இடது இடுப்பு மற்றும் வயிற்று பகுதியில் இரண்டு துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் படுகாயம் அடைந்தார்.
இதனையடுத்து துப்பாக்கி சூட்டில் காயமடைந்த மீனவரை இந்திய கடற்படையினர் ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்டு ஐஎன்எஸ் பருந்து கடற்படை முகாமில் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.பின்னர் ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மீனவர் வீரவேலைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
துப்பாக்கி சூட்டில் காயமடைந்த மீனவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அண்ணாபேருந்து நிலைய பகுதியில் உள்ள அரசு ராஜாஜி மருத்துவமனை விபத்து மற்றும் தீவிர சிகிச்சை பிரிவிற்கு ஆம்புலன்ஸ் மூலமாக அழைத்துவரப்பட்டு அறுவை சிகிச்சை நடைபெற்றுவருகிறது. இதனையடுத்து சிகிச்சைக்காக வந்த மீனவரை அமைச்சர்கள் பி.மூர்த்தி, அனிதா ராதாகிருஷ்ணன் , நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய பின்னர் மருத்துவர்களை சந்தித்து சிகிச்சை குறித்து கேட்டறிந்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து மீனவர்நலன்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியபோது :
வயிறு, தொடை என 5 இடங்களில் குண்டு சிதறல்கள் காயம் இருப்பதாகவும், துப்பாக்கி சூட்டில் காயமடைந்த மீனவர் சுய நினைவோடு இருக்கிறார் மீனவருக்கு உயர் சிகிச்சை அளிக்க முதல்வர் உத்தரவு அளித்துள்ளார் எனவும்,
நமது இந்திய கடற்படையால் நமது மீனவர் சூடப்பட்டது வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது, இலங்கை கடற்படையின் தாக்குதல்கள் கட்டுப்படுத்தப்பட்டு உள்ள நிலையில் இந்திய கடற்படையின் தாக்குதல் வருத்தத்திற்குரியது இந்த தாக்குதல் குறித்து தமிழக முதலமைச்சர் இந்திய கப்பற்படையினரை தொடர்புகொண்டு தனது கண்டனத்தை பதிவு செய்வார் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *