• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

கிரீஸ்-ல் நிகழ்ந்த வருடத்தின் முதல் சந்திர கிரகணம்…

Byகாயத்ரி

May 16, 2022

கிரீஸ் நாட்டில் ஏதென்சில் உள்ள புராதண கிரேக்க ஆட்சியாளர் பசைடன் கோவிலின் பின் சந்திர கிரகணம் அதிக அளவில் காணப்பட்டது. இந்தச் சந்திரகிரகணம் சூரியனின் ஒளி நிலவின் மீது படாமல் பூமி மறைக்கும் போது ஏற்படுகிறது. அதனை தொடர்ந்து இன்றைய தினம் இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்கி மதியம் 12.20 மணிக்கு சந்திர கிரகணம் முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த சந்திர கிரகணம் வட,தென் அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் தெரியும். ஆனால் இந்தியாவில் பார்க்க முடியாது என்றாலும் நாசா நேரலையில் யூடியுப் மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மே மாதத்தில் சந்திர கிரகணம் ஏற்பட்டதால் பூக்கள் பருவ காலத்தை குறிக்கும் வகையில் பிளார் மூன் என தென் அமெரிக்க நாடுகளை சேர்ந்த அல்கான்குயின் பழங்குடியின மக்கள் பெயர் சூட்டியுள்ளனர்.