விபத்திற்குள்ளான சீன விமாத்திற்கு நேர்தது எதிர்பாராத விபத்தா? அல்லது சதியா? என்ற சந்தேகத்தை கருப்பெட்டி ஆய்வில் ஏற்பட்டுள்ளது.
சீனாவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 737 ரக விமானம், அந்நாட்டின் குன்மிங் நகரில் இருந்து வூஸுநகருக்கு கடந்த மார்ச் 21-ம் தேதி மதியம் புறப்பட்ட நிலையில், குவாங்சூ மாகாணத்தில் உள்ள மலைப்பகுதிக்கு மேல் 31 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரிந்தது. இந்த விமானத்தில் 123 பயணிகள், 9 ஊழியர்கள் உட்பட மொத்தம் 132 பேர் இருந்தனர். எவருமே உயிர் பிழைக்கவில்லை.
இந்த விமானம் கீழே விழுந்த போது செங்குத்தாக கீழ் நோக்கிப் பாய்ந்ததால் அது விபத்துதானா இல்லை ஏதேனும் சதியா என்ற ஊகங்கள் எழுந்தன .இந்நிலையில் விமானத்தின் கருப்புப் பெட்டியில் பதிவான விவரங்கள் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
விமானத்தை இயக்கும் பைலட்டுகளுள்ள காக்பிட்டில் இருந்த யாரோ ஒருவரே விமானத்தை வேண்டுமென்றே விபத்துக்குள்ளாக்கி இருக்க வேண்டும் கருப்புப் பெட்டி ஆய்வு உணர்த்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விமான விபத்து ஏற்பட்ட சில நாட்கள் சீனாவில் பலரும் விமான பயணத்தை தவிர்த்துவந்தனர். இந்நிலையில் விமானவிபத்து சதியா இருக்கலாம் என்ற தகவல் சீனாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.