ரஜினி நடிப்பில் தீபாவளி தினத்தில் வெளியான திரைப்படம் அண்ணாத்த. சிவா – ரஜினி கூட்டணி முதல் முறையாக இணைந்திருக்கும் திரைப்படம் என பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது அண்ணாத்த.
உலகம் முழுவதும் 3000-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. குறிப்பாக வெளிநாடுகளில் மட்டும் 1100 திரையரங்குகளில் வெளியாகி தமிழில் புதிய சாதனையை நிகழ்த்தி உள்ளது. தமிழகத்தில் அதிகாலை சிறப்பு காட்சிகளுடன் கோலாகலமாக திரைக்கு வந்துள்ளது. அண்ணாத்த கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.
அண்ணாத்த முதல் நாள் வசூலில் படம் பட்டையை கிளப்பியிருக்கிறது. தமிழகத்தில் 24 – 26 கோடிகளை வசூலித்திருப்பதாக கூறுகின்றனர். ஆஸ்திரேலியாவில் இதுவரை 1,14,047 ஆஸ்திரேலியன் டாலர்களை வசூலித்துள்ளது. நமது ரூபாயில் சுமார் 63 லட்சங்கள்.
குறிப்பாக சென்னையில் படம் ரிலீஸ் நாளில் நல்ல வசூலை அள்ளியது. தமிழ்நாட்டிற்கு வெளியே தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ரஜினியின் படம் நல்ல வசூல் செய்து உள்ளது.
வெளிநாடுகளில் அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் நல்ல வசூலை பெற்றுள்ளது.
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் உலகளாவிய வசூலை பொருத்தவரை, இப்படம் முதல் நாளில் ரூ.25 கோடிக்கு மேல் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல்நாள் வசூலில் அண்ணாத்த கிங்காக இருந்தாலும், வார நாள்களின் வசூல் முக்கியமானது. தீபாவளி விடுமுறை இன்னும் மூன்று தினங்கள் உள்ளன. அதற்குள் அண்ணாத்த குடும்ப ஆடியன்ஸின் உதவியால் பாதுக்காப்பான எல்லைக்குள் சென்று விடும் என்பதையே முதல்நாள் வசூல் காட்டுகிறது.