• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

முப்படை தளபதி முதலாம் ஆண்டு நினைவுதினம் -ஆதரவற்றோர் இல்லத்தில் அனுசரிக்கப்பட்டது

காட்டேரி பூங்கா அருகே ஹெலிகாப்ட்டர் விபத்தில் முப்படை தளபதி உட்பட 12 ராணுவ அதிகாரிகள் உயிரிழந்தனர்…
முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி பொதுமக்கள் நினைவு அஞ்சலி செலுத்தினர்.
கடந்த ஆண்டு டிசம்பர் 8ம் தேதி குன்னூர், காட்டேரி பூங்கா அருகேயுள்ள நஞ்சப்பா சத்திரம் கிராமத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் முப்படை தளபதி விபின் ராவத், அவரது மனைவி உட்பட 12 ராணுவ வீரர்கள் பலியாகினர்.இச்சம்பவம் நடந்து இன்றுடன் ஒராண்டு ஆகிறது. விபத்தில் உயிர் நீத்த முப்படை தளபதி உட்பட 12 ராணுவ வீரர்களுக்கு உதகையில் உள்ள அப்துல் கலாம் கல்வி மற்றும் பசுமை அறக்கட்டளை ஆதரவற்றோர் இல்லத்தில், அப்துல் கலாம் அறக்கட்டளை தலைவர் தஸ்தகீர் தலைமையில் இல்லத்தில் உள்ளவர்கள் மலர் தூவி நினைவு அஞ்சலி செலுத்தி வீர வணக்கம் மரியாதை செலுத்தியும், மெழுகுவர்த்தி ஏந்தி மரியாதை செலுத்தினர்.