மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டார சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகளின் நீர் ஆதாரமாகவும் விவசாயத்திற்காகவும் பயன்படக்கூடியது வைகை ஆறு இந்த ஆறானது தற்போது வறண்டு காணப்படுவதால் வரும் காலங்களில் குடிநீர் மற்றும் விவசாயம் பெரிய அளவில் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக இந்த பகுதி பொதுமக்கள் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்

குறிப்பாக கடந்த காலங்களில் வைகையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிய நிலையில் தற்போது வறண்டு காணப்படுகிறது மேலும் வைகை ஆற்றில் சோழவந்தான் முதல் மேலக்கால் வரை சுமார் 50க்கும் மேற்பட்ட இடங்களில் ஆற்றுப்பகுதியில் குடிநீர்காக கிணறுகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே வறண்டு கிடக்கும் வைகை ஆற்றில் குடிநீருக்காக கிணற்றின் மூலம் உறிஞ்சப்படும் நீரால் வைகை ஆறானது வறட்சியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது போதிய மழையின்மையால் சோழவந்தான் பகுதியில் வைகை ஆறு முற்றிலும் வறண்டு காணப்படுகிறது இதன் காரணமாகவும்
விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வைகை ஆற்றை நம்பி கரட்டுப்பட்டி முதல் மேலக்கால் வரை குருவித்துறை முதல் சோழவந்தான் சுற்றியுள்ள சுமார்
50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தென்னை, வாழை, நெல் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வரும் நிலையில், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக மேலக்கால் பகுதியில் மட்டும் வைகை ஆற்றுப் படுகையில் அமைக்கப்பட்டுள்ள 20-க்கும் மேற்பட்ட குடிநீர் கிணறுகள் மூலம் தொடர்ந்து தண்ணீர் உறிஞ்சப்படுவதால், பாசனக் கிணறுகள் வறண்டு பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளதால் தென்னை மகசூலும் கணிசமாக குறைந்துள்ளதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே, வைகை ஆற்றுப் பாசனப் பகுதிகளில் முறையான நீர் மேலாண்மை நடவடிக்கைகளை மேற்கொண்டு, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.





