• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

உதயநிதி ஸ்டாலின் வெளியிடும் எஃப்ஐஆர்

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘எஃப்.ஐ.ஆர்.’ திரைப்படம் வரும் பிப்ரவரி 11-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இத்திரைப்படத்தின் தமிழ்நாடு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வாங்கி வெளியிடுகிறது.பொங்கலை முன்னிட்டு ரிலீசுக்கு தயாராகி இருந்த நிலையில், பல படங்கள் கொரோனா பரவலால் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

தற்போது இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஒத்திவைக்கப்பட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. அதன்படி, முதல் படமாக விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’ வரும் பிப்ரவரி 4-ம் தேதி திரையரங்குகளில் வெளிவருகிறது.

இதையடுத்து மனு ஆனந்த் இயக்கத்தில், விஷ்ணு விஷாலின் நடிப்பில் உருவாகியுள்ள ‘எஃப்.ஐ.ஆர்’ திரைப்படம் வரும் பிப்ரவரி 11-ம் தேதி வெளியிட உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் படத்தில் விஷ்ணு விஷால் ஜோடியாக மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகிய 3 ஹீரோயின்கள் உள்ளனர். இயக்குநர் கௌதம் மேனன் மிக முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். அஸ்வத் என்பவர் இசையமைத்துள்ளார்.