

காஞ்சனா நாயகி நிக்கி தம்போலி, மிடுக்காக தன்னை வெளிப்படுத்தும் வகையில் மாஸ் காட்டும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்
ராகவா லாரன்ஸ் நடிப்பில்2019-ல் வெளியான காஞ்சனா திரைப்படத்தில் நாயகி ப்ரியாவாக வரும் வேதிகாவின் சகோதரியாக நிக்கி தம்போலி நடித்துள்ளார். தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற தன்மூலம் நிக்கி தம்போலி மக்கள் இடையே பிரபலமானவர்.




தெலுங்கு சினிமா உலகில் நடிக்கத் தொடங்கிய நிக்கி தம்போலி, Chikati Gadilo Chithakotudu படத்தில் நடித்தார். தெலுங்கு படத்தை தொடர்ந்து கடந்த 2019-ல் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான காஞ்சனா 3-ல் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். தொடர்ந்து சினிமாவில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
