

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையை இன்று தாக்கல் செய்வதற்கு புறப்பட்ட நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார்.
2025-26-ம் நிதி ஆண்டுக்கான தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்கிறார். இதனை முன்னிட்டு, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, மறைந்த திமுக தலைவர் கருணாநிதி நினைவிடத்திற்கு நேரில் சென்று மரியாதை செலுத்தினார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “எல்லார்க்கும் எல்லாம் எனும் முழக்கத்தை முன்வைத்து தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 -ஐ இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்வதற்கு முன்பாக, நவீன தமிழ்நாட்டின் சிற்பி – கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார். நிதியமைச்சராக தாக்கல் செய்யும் இரண்டாவது பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது.

