• Sat. Apr 20th, 2024

மதுரை வடபழஞ்சி புதிய மென்பொருள் நிறுவன கட்டிடத்திற்கு அடிக்கல்- நிதியமைச்சர் துவக்கி வைத்தார்

ByKalamegam Viswanathan

Apr 24, 2023

மதுரை வடபழஞ்சி தகவல் தொழில்நுட்ப பூங்காவில் ரூ.500 கோடி முதலீட்டில் 5000 பேர் பணிபுரியும் வகையில் புதிய மென்பொருள் நிறுவன கட்டிட அடிக்கல் பணி துவக்கவிழா தொடக்கம் தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் துவக்கி வைத்தார்
தமிழகத்தில் புதிய தொழிற்புரட்சியை ஏற்படுத்தும் விதமாக மதுரை நாகமலைபுதுக்கோட்டை அருகே உள்ள வடபழஞ்சியில் அரசு தகவல் தொழில்நுட்ப பூங்கா வளாகத்தில் அமெரிக்காவை சேர்ந்த டியோ மென்பொருள் தயாரிக்கும் நிறுவனம் ரூ.500 கோடி முதலீட்டில் தமிழக அரசிடம் ஒப்பந்தம் செய்து புதிய அலுவலக கட்டிடத்தை எல்காட் அலுவலக வளாகத்தில் மேற்கொள்கிறது.


இதற்கான பூமிபூஜையை தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இன்று தொடங்கி வைத்தார்.இதன் மூலம் சுமார் 5000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனமாக இந்த நிறுவனம் அமையும், இதன்மூலம் இளைய தலைமுறையினரின் வாழ்க்கை பொருளாதாரம் உயர்வடையும்.இதேபோல் தமிழகம் வரும் தனியார் நிறுவனங்களுக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்கி தொழில்நுட்ப துறை வளர்ச்சியில் பெரும் பங்குவகிக்க தமிழக அரசு பாடுபடும் என நிதியமைச்சர் P.T.தியாகராஜன் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *