

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சிறப்புமிக்க கோவில்களில் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் ஒன்று. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி, மாசி, சித்திரை, ஆடி ஆகிய மாதங்களில் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். இதில் மார்கழி மாதம் நடைபெறும் திருவிழா பெரும் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான மார்கழித் திருவிழா டிசம்பர் 11ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இதற்காக நேற்று காலை 7.30 மணிக்கு மேல் தேரோட்டமும், நள்ளிரவு சப்தவர்ண நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது. இன்று 20ஆம் தேதி ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது. திருவிழாவையொட்டி தினமும் வாகன பவனி, சப்பர ஊர்வலம், சமய சொற்பொழிவு, வில்லிசை கச்சேரி, பட்டிமன்றம் , பரதநாட்டியம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. இந்த தேர் திருவிழாவிற்கான கால்நாட்டு விழா இன்று காலை கோவில் முன்பு நடை பெற்றது.
