• Tue. Aug 25th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

ஸ்ரீவில்லிபுத்தூர் வைத்தியநாத சுவாமி கோவிலில் கொளுத்தப்பட்ட சொக்கப்பனை

Byகிஷோர்

Nov 20, 2021

ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோவிலில் திருக்கார்த்திகையை முன்னிட்டு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

தமிழக தென்மாவட்டத்தில் முக்கியமான திருத்தலங்களில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்தூர் வைத்தியநாத சுவாமி திருகோவிலில் ஒவ்வொரு ஆண்டும் திருக்கார்த்திகையை முன்னிட்டு வைத்தியநாதசுவாமி, சிவகாமியம்மாள் சன்னதிக்கு முன்பு உள்ள குளத்தங்கரையில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.

அந்தவகையில் திருக்கார்த்திகை திருநாளான நேற்று இரவு வைத்தியநாத சுவாமி கோவிலில் சொக்கபானை கொளுத்தும் நிகழ்ச்சிக்காக வைத்தியநாத சுவாமி கோவிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க சர்வ அலங்காரத்தில் வைத்தியநாதசுவாமி, சிவகாமிஅம்பாள், முருகன், வள்ளி, தெய்வானை சுவாமிகளுக்கு கோயில் கொடிமரம் முன்பு தீபாராதனை காட்டப்பட்டு குளக்கரை அருகில் சுவாமிகளை எழுந்தருளச் செய்து சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

இரவு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சமூக இடைவெளியை பின்பற்றி ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மடவார் விளாகம் வைத்தியநாதசுவாமி திருகோவில் நிர்வாக அதிகாரி மற்றும் கோவில் ஊழியர்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.