• Wed. Nov 29th, 2023

இதற்கும் இனி கட்டணம் அதிகரிப்பு… கேஸ் சிலிண்டர் பயனாளர்களுக்கு அறிவிப்பு..

Byகாயத்ரி

Aug 23, 2022

பிரதமர் மோடியின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் அனைவர் வீட்டிலும் சமையல் எரிவாயு அடுப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதால் பெரும்பாலானோர் தற்போது சமையல் எரிவாயு அடுப்பை பயன்படுத்தி வருகிறார்கள். அதே சமயம் கேஸ் சிலிண்டர் விலை ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இது மக்களுக்கு பெரும் சுமையாக இருக்கும் சூழலில் தற்போது கேஸ் சிலிண்டர் கட்டாய பரிசோதனை கட்டணம் முன்பு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை 75 ரூபாய் என வசூலிக்கப்பட்ட வந்தது.இந்நிலையில் தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை என மாற்றப்பட்டு 250 ரூபாயாக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனுடன் 18% ஜிஎஸ்டியும் சேர்த்து கேஸ் சிலிண்டர் பயனர்கள் 295 ரூபாய் செலுத்த வேண்டியது இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *