பொன்மொழிகள்
1. பாராட்டுக்கு நாவின் ஈரம் மட்டும் போதாது. மனதின் ஈரமும் வேண்டும்.
2. சந்தேகத்தைப் போல் விரைவாக வளரும் விச விருட்சம் வேறெதுவுமில்லை.
3. மாமரம் நிரம்பப் பூக்கிறது, ஆனால் அவ்வளவுமா பழங்களாகின்றன. வாழ்க்கை மரமும் அப்படித்தான். அதில் ஆசைப் பூக்கள் நிரம்பப் பூக்கின்றன, ஆனால்?
4. கண்டனத்தைத் தாங்கிக் கொள்ளும் திடமனம் இல்லையென்றால் கடமையை நிறைவேற்ற முடியாது.
5. எதிரிகள் இருக்கிறார்களே என்று கவலைப்பட்டு ஒதுங்காதே. உன் செயல்கள் மூலம் எதிரிகளை இல்லாது செய்துவிடு.