பொன்மொழிகள்
1. உங்கள் கனவுகளை அடைய நீங்கள் எந்த இடத்தில் பிறந்தீர்கள் எந்தச் சூழ்நிலையில் வளர்ந்தீர்கள் போன்றவை ஒருபோதும் தடையாக அமையாது.. இலக்கை அடையும் வரை உங்கள் திறமையின் மீது நம்பிக்கை வைத்துப் போராடுங்கள்
2. சிறப்பாகச் செய்து முடிக்க வேண்டிய எந்தச் செயலையும் அவசரமாகச் செய்து முடிக்க திட்டமிடாதீர்கள்.
3. நீங்கள் அடைய விரும்பும் ஒன்றை இலக்காக மட்டும் எண்ணாமல் வாழ்க்கையாக எண்ணுங்கள் இலக்குக்காக மட்டும் செயல்படுகிறீர்கள் எனில் உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்கிறீர்கள் என்றே அர்த்தம்.
4. மற்றவர்களின் ஏளனங்கள் என்னை ஒருபோதும் வீழ்த்தியதில்லை காரணம் என் மனவலிமைக்குப் பலம் அதிகம்
5. வாழ்க்கை என்பது போர்க்களம் இதில் ரத்தமும் ரணங்களும் தவிர்க்க முடியாதவை. ஏனெனில் இவைதாம் வெற்றியை தீர்மானிக்கின்றன.