• Tue. Dec 10th, 2024

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Feb 5, 2022

சிந்தனைத் துளிகள்

• விலங்குகளிடம் உரிமையோடு வாழ்வதைவிட மக்களன்பு உடையவர்களிடம் அடிமையாக வாழ்வதே போதும்.

• இரக்கம் மட்டும் இருந்தால் என்ன பயன்? எண்ணியபடி உதவி செய்ய வேண்டுமென்ற உறுதி இல்லாதபோது இரக்கம் பயன்படுவதே இல்லை.

• எளிய வாழ்வைப் பற்றிப் பேசுவதற்கும் தயங்குவதில்லை, எழுதுவதற்கும் தயங்குவதில்லை. வாழ்வதற்கு மட்டும் தயங்குகிறோம்.

• சமுதாயத்தில் நல்ல கருத்து உருவாகிவிட்டால், அதன் பிறகு தீய அரசாங்கம் ஏற்பட முடியாது. ஏற்பட்டாலும் நிலைக்க முடியாது.

• வெற்றி என்பது முடிவும் அல்ல, தோல்வி என்பது வீழ்ச்சியும் அல்ல. இரண்டுமே அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கானது.