சிந்தனைத்துளிகள்
ஒரு ஊர்ல பாட்டி ஒருத்தி வடை சுட்டுக்கிட்டு இருந்தாள். ‘எந்தப் பாட்டி’ன்னு கேட்கறீங்களா?’ முன்பொரு காலத்திலே காக்கையிடம் ஏமாந்து போன அதே பாட்டிதாங்க. இப்பவும் வடைதான் சுட்டு வித்துக்கிட்டு இருக்காங்க.
அப்போ ஒரு காக்கா வந்துச்சு. இது முதல் தடவை வடையை எடுத்துட்டுபோன காக்கா இல்லைங்க. அதோட பேரன்.
“வந்துட்டியா… உங்க தாத்தா மாதிரி திருடித்திங்க. ஏண்டா, எப்படா உழைத்து சாப்பிடப்போறீங்க?” என்று பாட்டி கோபப்பட்டாள்.
அதை கேட்ட பேரன் காக்காவுக்கு அவமானமா போச்சு. தலைகுனிஞ்சு நின்னுச்சு. மீண்டும் பாட்டி பேசினாள்.
“அதான் இப்போ புதுசு புதுசா என்னனென்னமோ விக்குறாங்களே. ‘பிச்சா… பக்கர்‘னு அங்க போக வேண்டியதுதானே”.
“என்னது பிச்சா… பக்கரா..? ஓ… பீட்ஸா, பர்கரா? அதெல்லாம் நம்ம உடம்புக்கு ஒத்துக்காது பாட்டி. அது ஜங்க் ஃபுட்” என்று விளக்கமளித்தது காக்கா.
“சரி உன்னை பார்த்தா பாவமா இருக்கு. இந்தா, ஒரு வடையை பிச்சையா போடறேன்”, என்று ஒரு வடையை வீசியெறிந்தாள் பாட்டி. காக்கை வடையுடன் ஒரு மரத்தில் வந்து அமர்ந்தது. அப்போது ஒரு நரி அங்கு வந்தது.
“காக்கா… காக்கா நீ ரொம்ப அழகா இருக்கே! உன் அழகான குரலில் ஒரு பாட்டு பாடு” என்று வழக்கமாக தந்திரம் பண்ணுச்சு. இது பழைய நரியோட பேரன் நரி.
“வந்துட்டார்யா ஏ.ஆர்.ரஹ்மான்! எனக்கு சான்ஸ் கொடுக்க… ஏண்டா நரி, நீ டயலாக்கை கொஞ்சம் கூட மாத்தவேமாட்டியா?”
“என்ன காக்கா ரொம்ப வெறுப்பா பேசுறே?!”
பாட்டி தன்னை திட்டியதை நரியிடம் சொன்ன காக்கா, “இனிமே நான் உழைச்சுதான் சாப்பிடப்போறேன். அதனால இந்த வடையை உனக்கே பிச்சையா போடுறேன்”, என்று விருட்டென பறந்தது.
’காக்கா போடுற பிச்சையை திங்கற அளவுக்கு நான் கேவலமா போயிட்டேனா?’ என்று ஆதங்கப்பட்டது நரி.
‘எனக்கும் மானம், ரோஷம் இருக்கு. நானும் உழைச்சுதான் சாப்பிடுவேன்‘ என உறுதி எடுத்தது.
அப்போது, “ஐயா தர்மம் போடுங்கய்யா…” என்று ஒரு குரல்.
‘நாம திருந்தினாலும் இவங்க திருந்தமாட்டாங்க போலிருக்கே…‘ என்று அந்த வடையை மனிதனுக்கு பிச்சை போட்டுவிட்டு ஸ்டைலாக சென்றது நரி.
மாற்றம் மனிதர்களிடம் முதலில் வந்தால் நன்றாக இருந்திடுமோ?!
- இன்று வானியலாளர் இலைமன் சுட்டிராங் சுபிட்சர் நினைவு நாள்அமெரிக்கக் கோட்பாட்டு இயற்பியலாளர், வானியலாளர் இலைமன் சுட்டிராங் சுபிட்சர் நினைவு நாள் இன்று (மார்ச் 31, […]
- சுடுகாட்டில் மொட்டை அடித்து காங்கிரஸ் போராட்டம்- பாஜக புகார்நாகர்கோவிலில் உள்ள அனைத்து சமுதாய சுடுகாட்டில் மோடி படத்துடன் மொட்டை அடித்து மாநகர தலைவர் நவீன்குமார் […]
- பத்து தல’ படத்தில் நடித்தது குறித்து நடிகர் கெளதம் கார்த்திக்நடிகர் கௌதம் கார்த்திக் தனது திரையுலக வாழ்க்கையில் முக்கியமான படம் பத்துதல என்கிறார் ‘பத்து தல’ […]
- அஜய் தேவ்கன் நடித்திருக்கும் ‘மைதான்’ டீசர் வெளியானதுநடிகர் அஜய் தேவ்கான் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக ‘மைதான்’ இருக்கிறது. உலக அளவில் பலராலும் […]
- மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் -உதவிசெயற்பொறியாளர் கைதுமதுரை மாவட்டம் விக்கிரமங்கலத்தில் மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்ய ரூ.2500 லஞ்சம் வாங்கிய மின் […]
- பிரபாஸ் நடிக்கும்ஆதிபுருஷ் போஸ்டர் வெளியீடு சர்ச்சையை ஏற்படுத்துமா?சினிமாவில் அதிகபட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு வரும்படங்களில் பிரபாஸ் நடித்து வரும் ஆதிபுருஷ் இடம்பெற்றுள்ளது.இந்த திரைப்படம் 2023ஜூன்மாதம் 16ஆம் […]
- மதுரை காமராஜர் பல்கலை. விடுதி மாணவி மாடியில் இருந்து விழுந்து பலிமதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் விடுதியில் இருந்த கல்லூரி மாணவி மாடியில் இருந்து விழுந்து பலி தவறி […]
- நகை திருட்டு புகார் மனுவை மாற்றியஐஸ்வர்யா ரஜினிகாந்த்ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த நகை காணாமல்போனது சம்பந்தமாக காவல் துறையில் புகார் கொடுத்தது பல்வேறு […]
- தமிழகத்தில் மீண்டும் மாஸ்க் கட்டாயம்இந்தியா முழுவதும் கொரோனா மீண்டும் அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக மருத்தவமனைகளில் மாஸ்க் கட்டாயம் […]
- பத்துதல- திரைவிமர்சனம்வேற்று மொழியில் வெற்றிபெற்ற படங்களை தமிழில் தயாரிப்பது அதுவும் வியாபாரம் உள்ள நடிகர்களை நடிக்க வைத்து […]
- மதுரையில் குழந்தையை தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான பயிற்சி முகாம்குழந்தையை தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான மாநில செயல் திட்டத்தை அமல்படுத்துவதற்கான பயிற்சி முகாம் மதுரையில் இன்று […]
- கச்சத்தீவில் சிவன், முனீஸ்வரன் கோவில் கட்ட வேண்டும் -அர்ஜுன் சம்பத் பேட்டிமதுரை கலெக்டரிடம் மனு அளித்தஅர்ஜுன் சம்பத் கச்சத்தீவில் சிவன், முனீஸ்வரன் கோவில் கட்ட வேண்டும் –என […]
- “சுடுகாட்டில்” பிரதமர் மோடியின் உருவ படத்தை வைத்து -காங்கிரஸ் போராட்டம்ராகுல் காந்திக்கு இரண்டாண்டு சிறை தண்டனையை எதிர்த்து நாகர்கோவிலில் காங்கிரஸ் கட்சியினர் ஒரு வித்தியாசமான போராட்டத்தை […]
- தயிர் பாக்கெட்டில் இந்தி வார்த்தை தேவையில்லை -பின்வாங்கிய ஒன்றிய அரசுதயிர் பாக்கெட்டில் இந்தி வார்த்தையை சேர்க்கவேண்டும் எனஒன்றிய அரசின் உணவு தரம் மற்றும் பாதுகாப்பு அமைப்பு […]
- வைக்கம் நூற்றாண்விழா- முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்புபெரியார் நடத்திய வைக்கம் போராட்ட நூற்றாண்டுவிழா தமிழகத்தில் இன்று முதல் ஓராண்டு வரை நடைபெறும் என […]