![](https://arasiyaltoday.com/wp-content/uploads/2024/09/ad1.jpg)
சிந்தனைத்துளிகள்
வழிகள் இன்றி கூட வாழ்க்கை அமைந்து விடலாம்
ஆனால் ஒரு போதும் வலிகள் இல்லாமல் வாழ்க்கை அமைந்து விடாது.
நீ வேறு யாருக்கும் உண்மையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. உன் மனசாட்சிக்கு நீ உண்மையாக இருந்தால் போதும்.
அடுத்தவர்கள் கதைப்பதற்கு ஏற்ப நீ வாழ நினைத்தால்
ஆயிரம் பேர் ஆயிரம் விதமாக பேசுவார்கள்
அப்படி வாழ இந்த ஆயுள் போதாது.
செய்த தவறை ஏற்றுக் கொள்ளுபவர்களை விட
அதில் இருந்து தப்பிக்க காரணம் தேடுபவர்களே அதிகம்…
அந்த தவறை நீயும் செய்து விடாதே…!
வாழ்க்கைக்கு இரண்டு பக்கம் உண்டு
ஒரு பக்கம் இன்பம் மறு பக்கம் துன்பம்
இரண்டு பக்கத்தில் ஒரு பக்கமாவது இருக்க வேண்டும்..!
முயற்சி உடையவனின் வளர்ச்சியை தடுக்க முடியாது.
புதைத்தாலும் மரமாக முளைத்து எழுந்து நிப்பான்.
சிக்கல்கள் வாழ்க்கையில் அனைவருக்கும் இருப்பவை
அந்த சிக்கல்கள் உன்னை சிதைக்க வருபவை அல்ல.
அவை தான் உன்னை செதுக்குபவை..!
![](https://arasiyaltoday.com/wp-content/uploads/2024/09/ad1.jpg)