• Wed. Sep 11th, 2024

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Dec 20, 2022

சிந்தனைத்துளிகள்

 யாரும் உன்னை தூக்கி வீசினால் அவர்கள் முன்னால்
உயரமாக வளர்ந்து நில்லு… அடுத்த தடவை அவர்கள்
உன்னை பார்க்கும் போது அண்ணாந்து பார்க்கும் அளவிற்கு…!

 நீ ஒரு செயலை செய்ய விருப்பினால் செய்ய தொடங்கும் போது
பேசுவதை நிறுத்தி விடு அடுத்த தடவை நீ பேசும் போது
அந்த செயல் செய்து முடிக்கப்பட்டு இருக்க வேண்டும்.

 உண்மையான உங்கள் வளர்ச்சியின் தொடக்கம்
உங்கள் குறைகளை நீங்களே அடையாளம் கண்டு
கொள்ளும் போது தொடங்குகின்றது..!

 உனக்கென்று படைக்க பட்ட எதுவும்
உன்னை விட்டு வேறு யாருக்கும் போகாது
நீ தான் அதை முயன்று போராடி வெல்ல வேண்டும்.

 உங்களுக்காக நீங்களே சிந்தியுங்கள்
அது பிழையாக இருந்தாலும் பரவாயில்லை
அடுத்த முறை சரியாக சிந்திக்க முடியும்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *