சிந்தனைத்துளிகள்
ஒரு ஊரில் ஒரு செல்வந்தன் இருந்தான். அவன் வியாபார நிமித்தமாக வெளியூர் சென்று திரும்பிய போது அவனது அழகான பெரிய பண்ணை வீடு தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது.
“அந்த ஊரிலேயே மிகவும் அழகான வீடு அவனுடையது தான். .
“அந்த வீட்டை இரண்டு மடங்கு விலைகொடுத்து வாங்க பலரும் தயாராகஇருந்தனர். ஆனால் இவன்விற்கவில்லை.
“இப்போது அந்த வீடு அவன் கண் முன்னேஎரிந்துகொண்டிருந்தது.
“ஆயிரம் நபர்கள் சுற்றி நின்று வேடிக்கைபார்த்துக் கொண்டிருந்தார்கள். தீ முழுவதுமாக பரவிவிட்டதால் அதைஅணைத்தும் பிரயோஜனம் இல்லை என்று எந்த முயற்சியும் எடுக்கவில்லை. .
வணிகனோ செய்வதறியாமல் கண்ணில் நீரோடு புலம்பிகொண்டிருந்தான்.
“ஐயோ என் வீடு ! என் வீடு ! என்றுஅலறினான்.
“அப்போது அவனின் மூத்த மகன் ஓடிவந்துஒரு விஷயத்தை சொல்கிறான் “தந்தையே ஏன் அழுகிறீர்கள் ?
“இந்த வீட்டை நான் நேற்றே மூன்று மடங்கு லாபத்திற்கு விற்றுவிட்டேன். .
“இதனால் நமக்கு நஷ்டம் இல்லை என்றுகூறினான்.
“இதை கேட்ட வணிகனுக்கு ஏக மகிழ்ச்சி. “அவனது சோகம் அனைத்தும் மறைந்து மகிழ்ச்சி உண்டானது.
” இப்போது வணிகனும் கூடி இருந்த கூட்டத்தில் ஒருவனாக நின்று வேடிக்கை பார்க்க தொடங்கினான்.
“அதே வீடு தான் ” ,
“அதே நெருப்பு தான் ” ,
“ஆனால் சில வினாடிகளுக்கு முன் இருந்த தவிப்பும் சோகமும் இப்போது
அவனிடம் இல்லை.
“” சிறிது நேரத்தில் வணிகனின் இரண்டாவது மகன் ஓடி வந்து “தந்தையே
ஏன் இப்படி கவலையில்லாமல் சிரிக்கிறீர்கள்? நாங்கள் விற்ற இந்த வீட்டிற்கு முன்பணம் மட்டுமே வாங்கியுள்ளோம். முழு தொகை இன்னும்வரவில்லை. “வீட்டை வாங்கியவன் இப்போது மீதிபணத்தை தருவானா என்பது சந்தேகமே”என்றான். .
“இதை கேட்ட வணிகன் அதிர்ச்சி அடைந்தான். மீண்டும் சோகத்தில் ஆழ்ந்தான். கண்ணீரோடு மீண்டும் புலம்ப ஆரம்பித்தான். “தனது உடமை எரிகிறதே என்ற எண்ணம் மீண்டும் அவனை வாட்டியது. “சில மணித்துளிகள் பின்பு வணிகனின் மூன்றாவது மகன் ஓடி வருகிறான்.
“தந்தையே கவலை வேண்டாம். இந்த வீட்டை வாங்கிய மனிதன் மிகவும் நல்லவன் போலும். “இந்த வீட்டை வாங்க அவன் முடிவு செய்தபோது வீடு தீ பிடிக்கும் என்று உங்களுக்கும் தெரியாது எனக்கும் தெரியாது.
“ஆகையால் நான் பேசியபடி முழு தொகையை கொடுப்பது தான் நியாயம் என்று என்னிடம் இப்போது தான் சொல்லி அனுப்பினான்” என்று மகிழ்ச்சியோடு தெரிவித்தான். “இதை கேட்ட வணிகனுக்கோ ஏக சந்தோஷம்.
“கடவுளுக்கு நன்றி சொல்லி ஆடிப்பாடி மகிழ்ந்தான். கண்ணீரும் சோகமும்
மீண்டும் காணாமல் போய்விட்டது.
“மீண்டும் கூட்டத்தில் ஒருவனாக நின்று வேடிக்கை பார்க்க தொடங்கினான்.
“இங்கு எதுவுமே மாறவில்லை ” அதே வீடு, அதே நெருப்பு, அதே இழப்பு “,
இது என்னுடையது என்று நினைக்கும் போது அந்த இழப்பு உங்களை சோகத்தில் ஆழ்த்துகிறது. ” இது என்னுடையது அல்ல என்று நினைக்கும் போது உங்களை சோகம் தாக்குவது இல்லை. .”உலகில் எதுவுமே நிரந்தரமானது இல்லை. ” ஒருவனுக்கு மட்டுமே சொந்தமானது இல்லை. அனைத்துமே அழிய கூடியது. “நான் உட்பட எல்லாமே ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் அழியக்கூடியது அல்லது வேறு ஒருவனுக்கு சொந்தமாக கூடியதுஇதைத்தான் நம் நாட்டின் ஆன்மீகமும் சொல்கிறது
எதை நீ இழந்தாய்… எதற்காக அழுகிறாய்…
இன்று எது உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையது…
மாற்றம் என்பது மட்டுமே மாறாதது….
கடமையை செய்… பலனை எதிர்பாராதே… ஏனெனில் கடமைக்கான பலனை இறைவன் தர மறப்பதில்லை
அன்பாய் இருப்போம்..
பண்பாய் இருப்போம்..
அழிவிற்குப் பின்னும்
அனைவரின் நெஞ்சில் நீங்காமலிருப்போம்…!
- குறள் 367:அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினைதான்வேண்டு மாற்றான் வரும். பொருள் (மு.வ):ஒருவன் ஆசையை முழுதும் ஒழித்தால், அவன் […]
- மாரடைப்பு… வகுப்பறையிலேயே உயிரிழந்த 11ம் வகுப்பு மாணவிமத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் 11-ம் வகுப்பு பள்ளி மாணவிக்கு மாரடைப்பு ஏற்பட்டு வகுப்பறையிலேயே உயிரிழந்த […]
- நாகர்கோவில்- நாகராஜா கோவிலில் தைப்பெருந்திருவிழா கொடியேற்றம்கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பிரசதிபெற்ற நாகராஜா கோவிலில் தைப்பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது .கன்னியாகுமரி மாவட்டம் […]
- பேருந்தில் அபாயகரமான பயணம்… பள்ளி மாணவர்கள் சாகசம்..!!நீலகிரி மாவட்டம் பள்ளி மாணவகள் அபாயகரமான பயணம் மேற்கொள்கின்றனர்கூடுதல் பேருந்து இயக்க பொதுமக்கள்கோரிக்கைநீலகிரி மாவட்டம் கூடலூர் […]
- மாணவ மாணவிகளுக்கு உடல்நல குறைவு -விஜய் வசந்த எம்பி.ஆறுதல்கன்னியாகுமிரியில் என்.எஸ்.எஸ் முகாமில் கலந்து கொண்ட மாணவ,மாணவிகள் உடல் நலக்குறைவு விஜய்வசந்த எம்.பி. நேரில் பார்வையிட்டு […]
- மஞ்சூர் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்நீலகிரி மாவட்டம் மஞ்சூர் மோல் பஜார் இன்கோ தேயிலை தொழிற்சாலை அருகில் அமைந்துள்ள பழமை வாய்ந்த […]
- பிப். 3ம் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வு…ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2க்கான தேர்வு பிப்ரவரி 3ம் தேதி தொடங்கி பிப்ரவரி 14ம் […]
- நீலகிரி அருகே கிணற்றில் விழுந்து சிறுத்தை உயிரிழப்புநீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே ஏலமன்னா அருகே கிணற்றில் விழுந்த சிறுத்தை உயிரிழந்தது. வனத்துறையினர் இது […]
- என் இனிய தனிமையே முதல் பாடல் வெளியீடுவளர்ந்து வரும் நடிகர் ஸ்ரீபதி, சகு பாண்டியன் இயக்கத்தில் ஜேம்ஸ் வசந்த் இசையில் உருவாகும் “என் […]
- கெவி படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்ட யோகிபாபு, கலையரசன்ஆத்யக் புரடக்சன்ஸ் சார்பில் கௌதம் சொக்கலிங்கம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கெவி’. தமிழ் தயாளன் இந்தப் […]
- வித்தியாசமான கோணத்தில் உருவாகியுள்ள ‘குடிமகான்’சினாரியோ மீடியா ஒர்க்ஸ் சார்பில் விஜய் சிவன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘குடிமகான்’. நாளைய இயக்குநர் […]
- தோனி என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் லெட்ஸ் கெட் மேரீட் படத்தின் தொடக்க விழாதோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாராகும் ‘எல்.ஜி.எம்’ (லெட்ஸ் கெட் மேரீட் ) எனும் திரைப்படத்தின் […]
- பர்னிங் ஸ்டார் அறிமுகமாகும் தமிழ் படம்சம்பூர்ணேஷ் பாபு. தெலுங்கு படவுலக கதாநாயகர். இவரை அங்கே ‘பர்னிங் ஸ்டார்’ என்று அழைப்பார்கள். இவரை […]
- மஞ்சூரில் பள்ளி மாணவர்களைக் கொண்டு அடிக்கல் நாட்டு விழாபுதிய வகுப்பறைகள் கட்ட பள்ளி மாணவர்களைக் கொண்டு அடிக்கல் நாட்டு விழா பெற்றோர் ஆசிரியர் கழகம் […]
- மோடியின் ஆவணப்படம் பார்த்த மாணவர்கள்- போலீசார் இடையே தகராறு-வீடியோடெல்லி பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போலீசார் இடையே தகராறு ஏற்பட்டதையடுத்து தள்ளுமுள்ளு நிலவி வருகிறது.டெல்லி பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் […]