சிந்தனைத்துளிகள்
புகழ்பெற்ற ஓவியர் மைக்கேல் ஏஞ்சலோ ஒருமுறை தன்னுடைய சிற்பக் கூடத்தில் மிகவும் கஷ்டப்பட்டு ஒரு ஓவியத்தை அழகாக செதுக்கி கொண்டிருந்தார்.
பல நாட்களாக பார்த்து பார்த்து எந்த குறையுமின்றி அந்த சிற்பத்தை செதுக்கி கொண்டிருந்தார்.
அப்போது அவருடைய ஓய்வுக்கூடத்திற்கு நண்பர்கள் மூவர் வந்தனர், அங்கிருந்த சிற்பங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
தன்னை மறந்து சிற்பங்களை செதுக்கி கொண்டிருந்த ஏஞ்சலோவிடம், இந்த சிலையின் மூக்கு சரியில்லை, கோணலாக உள்ளது, இதை கொஞ்சம் சரிபண்ணுங்க என்றனர்.
அந்த சிற்பத்தை திரும்பவும் பார்த்தார், பிறகு சுத்தியலை எடுத்துக் கொண்டு மேலே ஏறி சரி பண்ணினார்.
இப்பொழுது அந்த சிலையை பார்த்த நண்பர்கள் ஆஹா பிரமாதம்! என்றனர்.
இதனை கேட்ட ஏஞ்சலோ, இப்படிப்பட்ட நண்பர்கள் தான் எனக்குத் தேவை. குறைகளை சொல்வதன் மூலம் என்னால் சரி செய்யமுடிகிறது என்று தெரிவித்தார்.
உண்மையில் நடந்தது என்ன தெரியுமா? அந்தச் சிலையில் எந்த குறையும் இல்லை என்பது ஏஞ்சலோவிற்கு நன்றாக தெரியும்.
எனவே சுத்தியலையும், உளியையும் வைத்துக் கொண்டு சரிசெய்வது போல் நடித்துக் கொண்டிருந்தார்.
உளியின் சத்தத்திற்கு ஏற்ப சலவைக் கற்களை கீழே போட்டார், அதைக் கண்ட நண்பர்கள் உண்மையிலேயே மூக்கை சரிபண்ணியதாக நினைத்துக் கொண்டனர்.
புகழின் உச்சியில் இருந்த மைக்கேல் ஏஞ்சலோ நினைத்திருந்தால், என்னுடைய சிலையில் குறையா? என்று கேட்டிருக்கலாம்.
ஆனால் அப்படி கேட்டு நண்பர்களின் மனதை புண்படுத்தாமல் நடந்து கொண்டார்.
எந்த விஷயத்தையும் பொறுமையாக கையாண்டால் சண்டைக்கு வாய்ப்பே இல்லை என்பதை இக்கதை உணர்த்துகிறது.