• Wed. Apr 24th, 2024

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Mar 16, 2023

சிந்தனைத்துளிகள்

இதைப் படிப்பதால் உங்கள் வாழ்க்கை முறை, கவலைகள், பழக்க வழக்கங்களில் மாற்றம் ஏற்படலாம். உண்ண உணவும் உடுத்த உடையும் வசிக்க இடமும் உனக்கு இருந்தால் உலகில் உள்ள 75சதவிகித மக்களை விட நீ வசதி பெற்றிருக்கிறாய்.
உனக்கு வங்கியில் பணமிருந்தால், அவ்வாறு உள்ள 8சதவிகித பணக்காரர்களுள் நீயும் ஒருவன். உலகில் உள்ள 80சதவிகித மக்களுக்கு வங்கிக் கணக்கே இல்லை.
உன்னிடம் கணிப்பொறி இருந்தால் நீ அவ்வாறு வாய்ப்பு பெற்ற 1சதவிகித மனிதர்களுள் ஒருவன்.
நினைத்த நேரத்தில், நினைத்த நபருடன் மொபைலில் உன்னால் பேச முடிந்தால், அவ்வாறு வாய்ப்பே இல்லாமல் இந்த உலகில் இருக்கும் 175 கோடி மக்களை விட நீ மேலானவன்.
நோயின்றி காலையில் புத்துணர்வுடன் நீ எழுந்தால், அந்த வாய்ப்பற்று இரவுப் படுக்கையிலேயே, உயிர் துறந்த பலரை விட நீ பாக்கியசாலி.
பார்வையும் செவித் திறன், வாய் பேசாமை உள்ளிட்ட எந்தக் குறைபாடுகளும் இல்லாது நீ இருந்தால், அவ்வாறு உள்ள உலகில் உள்ள 20 கோடி மக்களை விட நீ நல்ல நிலையில் இருக்கிறாய்.
போர், பட்டினி, சிறைத்தண்டனை போன்ற சித்திரவதையில் நீ சிக்காமல் இருந்தால், உலகில் உள்ள 70 கோடி மக்களுக்கு கிடைக்காத நல்ல வாழ்க்கை அமைந்துள்ளது என அறிந்து கொள்.
கொடுமைகளுக்கு உள்ளாகாமல் நீ விரும்பும் தெய்வத்தை தொழ முடிந்தால், உலகில் உள்ள 300 கோடி மக்களுக்கு கிடைக்காத சலுகையை நீ பெற்றுள்ளாய்.
உன் பெற்றோரை பிரியாமல் அவர்களுடன் இருந்தால், நீ துன்பத்தை அறியாதவன் என்பதை புரிந்து கொள்.
தாகம் எடுத்தால் குடிப்பதற்கு உங்களுக்கு தண்ணீர் கிடைத்தால் நீங்கள் கொடுத்து வைத்தவர் தான்.
உலகம் முழுதும், சுமார் 100 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு பாதுகாப்பான தண்ணீர் குடிப்பதற்கு இல்லை.
கல்வி அறிவு பெற்று, இந்த செய்தியை உன்னால் படிக்க முடிந்தால், உலக அளவில் எழுத படிக்க இயலாத 80 கோடிக்கும் மேல் உள்ளவர்களுக்கு கிடைக்காத கல்வியை நீ பெற்றுள்ளாய்.
இணையத்தில் இந்த செய்தியை, உன்னால் படிக்க முடிந்தால், அது கிடைக்காத 300 கோடி மக்களை விட நீ மேலானவன்.
உன்னால் தலை நிமிர்ந்து நின்று சிரிக்க முடியுமானால், அவ்வாறு செய்ய இயலாத அளவுக்கு தைரியமும் நம்பிக்கையும் இல்லாதவர்களை விட, நீ கொடுத்து வைத்தவன்.
நீங்கள் அனுபவித்து வரும், வசதிகளையும் தொழில் நுட்பத்தையும் அனுபவிக்க இயலாமல், ஏன் அது பற்றிய அறிவு கூட இல்லாமல், கோடிக்கணக்கானோர் இவ்வுலகில் இருக்க, ஆண்டவன் இவ்வளவு விசயம் உங்களுக்கு கொடுத்திருக்கும் போது, நீங்கள் அதிர்ஷடசாலி இல்லையா? பின்ன..
நீங்கள் அதிர்ஷடசாலி தான்..!
வீண் கவலைகளை விட்டு,அந்த கவலைகளை காரணம் காட்டி குடும்பத்தில் குழப்பங்கள், போதைப் பொருட்கள் என்பவற்றை விட்டு விட்டு, நான் அதிர்ஷடசாலி என்ற தைரியத்தோடு உங்களால் இயன்றவரை மற்றவர்களுக்கு அன்புடன் உதவுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *