• Thu. Apr 25th, 2024

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Mar 17, 2023

சிந்தனைத்துளிகள்

ஒரு பெரியவருக்கு நான்கு மகன்கள், நால்வரும் எப்போதும் சண்டை போட்டு கொண்டே இருப்பார்கள். அதனை கண்டு அவர் மிகவும் வருத்தம் அடைந்தார். ஒற்றுமையாக இருங்கள் என்று கூறியும் அவர்கள் முடியாது என கூறிவிட்டார்கள். ஒரு நாள் அவருக்கு உடல் நலம் சரி இல்லாமல் போகவே, அவர்களுக்கு பாடம் புகட்ட புத்தி சொல்ல ஒரு போட்டியை வைத்தார்.
நால்வரையும் ஆளுக்கொரு கம்புகளை கொண்டு வர சொன்னார், அவர்களும் கொண்டு வந்தார்கள். தன மூத்த மகனை அழைத்து நான்கு கம்புகளையும் ஒன்றாக கட்ட சொன்னார்.
பிறகு ஒவோருவரையும் அழைத்து அந்த கட்டிய கம்புகளை உடைக்க சொன்னார். யாராலும் முடியவில்லை.
பிறகு கட்டுகளை அவிழ்த்து ஒவொன்றாக கொடுத்து உடைக்க சொன்னார், அனைவரும் சுலபமாக உடைத்தார்கள்.
ஒற்றுமையோட பலம் என்னான்னு இப்போ தெரியும்னு நினைக்கிறன். நீங்கள் நாலு பெரும் நான்கு கம்புகளை போலதான். ஆனால் ஒற்றுமையாக இருந்தால் யாராலும் உங்களை அசைக்க முடியாது என்று கூறினார்.
நான்கு மகன்களுக்கும் ஒற்றுமையின் பலம் புரிந்தது. அன்றிலிருந்து நால்வரும் சண்டையிடாமல் ஒற்றுமையாய் வாழத் தொடங்கினார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *