• Mon. Mar 17th, 2025

பாஜக மாவட்ட தலைவர் கைது

ByG. Silambarasan

Feb 28, 2025

பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் உருவப் படத்தை எரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு அளிக்க சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினர் கைது

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலில் நேற்றைய தினம் இஸ்லாமிய அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது அப்பொழுது பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரியின் உருவப்படங்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் இந்த நிலையில் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரின் உருவப் படத்தை எரித்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து கடலூர் மேற்கு மாவட்ட பாஜக தலைவர் தமிழழகன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினர் ஊர்வலமாக மனு அளிக்க சென்றனர்.

அப்பொழுது அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதை எடுத்து பாஜகவினருக்கும் காவல்துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பாஜகவினர் சாலையில் அமர்ந்து சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினரை காவல்துறையினர் கைது செய்தனர் இதனால் பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.