• Sat. May 9th, 2026
WhatsAppImage2026-05-08at053925
previous arrow
next arrow
Read Now

குப்பைக்கழிவுகளால் நிரம்பி வழியும் நிலையூர் கண்மாய்.., போர்க்கால அடிப்படையில் தூய்மைப்படுத்த விவசாயிகள் கோரிக்கை..!

ByKalamegam Viswanathan

May 15, 2023

நிலையூர் கால்வாய் முழுவதும், பிளாஸ்டிக்கழிவுகளும், குப்பைகளும் நிரம்பி பராமரிப்பின்றி கண்மாய் அழியும் நிலை – துர்நாற்றம் வீசி மர்ம நோய் பரவும் நிலை இருப்பதால், போர்க்கால நடவடிக்கை எடுத்து கண்மாயை தூய்மைபடுத்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ள நிலையூர் கால்வாய் பழமை வாய்ந்த கண்மாயாகும். இக்கால்வாய் மேலக்கால் பகுதியிலிருந்துநிலையூர் கம்பிக்குடி வரை அமைந்துள்ளதால் நிலையூர்- கம்பிக்குடி கால்வாய் எனப்பெயர் உள்ளது. இந்நிலையில், கடந்த சில வருடங்களாக கால்வாய் செல்லும் பாதையான சந்திராபாளையம், தேவி நகர், ஹார்விப்பட்டி உள்ளிட்ட பகுதிகள் முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகளும், குப்பை கூளங்களும் நிரம்பியதுடன், கழிவு நீர் கலந்து கால்வாய் முழுவதும் பாசனம் அடைந்து , பச்சை போர்வை போர்த்தியது போன்று கண்மாய் முழுவதும் துர்நாற்றம் வீசி மர்ம நோய் பரவும் நிலைக்கு உள்ளது. கண்மாயைச் சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான வீடுகளில் வசிப்போர் பலமுறை சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டும், செவிசாய்க்கவில்லை என கூறும் அப்பகுதிவாசிகள், போர்க்கால நடவடிக்கையில் அரசு நடவடிக்கை எடுத்து, மர்ம நோய் தாக்குவதற்கு முன் கண்மாயை தூய்மைப்படுத்தி, சீரமைக்க அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.