• Sun. Sep 8th, 2024

மதுரை அருகே ஓடும் பேருந்தில் பெணிடம் நகையை பறித்துச் சென்ற இருவர் கைது

ByKalamegam Viswanathan

May 13, 2023

மதுரை அருகே ஓடும் பேருந்தில் பெண் பயணியிடம் 12 பவுன் நகையை பறித்துச் சென்ற இருவர் கைது. அவனியாபுரம் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
மதுரை பரவை பகுதியைச் சேர்ந்த ஞானராஜ் மகன் ரமேஷ்குமார் (40) இவர் பிரபல நாளிதழ் ஒன்றில் பிரிண்டிங் பிரிவில் வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த மே 6ஆம் தேதி தனது சொந்த வேலையாக மனைவி ஜெயா மற்றும் இரண்டு குழந்தைகளுடன் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து தூத்துக்குடி செல்லும் பஸ்ஸில் பயணம் செய்திருக்கிறார்.
அப்போது சந்தேகம் படும்படி இரண்டு ஆண்கள் ஒரு பெண் ஆகியோர் தனது குடும்பத்தார்களிடம் ஒட்டி உரசி இருந்ததாகவும், பின்னர் அவர்கள் மதுரை மண்டேலா நகர் வந்தவுடன் இறங்கி சென்று விட்டதாகவும் பின்னர் சிறிது நேரம் கழித்து பார்த்தபோது தங்கள் அணிந்திருந்த 12 பவுன் நகை காணாமல் போனது.
எனவே இது குறித்து அவனியாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காவல் உதவி ஆணையர் செல்வகுமார் உத்தரவின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விமலா சம்பவம் நடந்த இடத்திற்கு நேரடியாக சென்று அங்குள்ள சிசிடிவியை பார்த்து புகார்தாரரிடம் விசாரித்தார் அப்போது ரமேஷ் கொடுத்த அடையாளத்தை வைத்து போலீஸ் தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று புகார்தாரர் அடையாளம் காட்டிய நபர்களை போலீசார் அலங்காநல்லூர் அருகே சென்று அவர்கள் வாகனத்தில் வரும் பொழுது இன்ஸ்பெக்டர் விமலா மற்றும் போலீசார் குற்றவாளிகள் இருவரை பிடித்து விசாரித்ததில் அழகர் கோவில் அப்பன்திருப்பதியை அடுத்துள்ள தொப்புளாம்பட்டியைச் சேர்ந்த ராஜுஎன்பவரின் மகன் முருகேசன் (48) அலங்காநல்லூரை அடுத்துள்ள ஆதனூரைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் பாண்டித்துரை (42) என்பது தெரிய வந்தது இருவரை கைது செய்து அவர்களிடம் இருந்த 12 பவுன் நகையை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *