தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டி மணற்படுகை பகுதியில் செல்லும் முல்லைப் பெரியாற்றில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கத்தினால் கரை உடைந்து தண்ணீர் முழுவதும் விளைநிலங்களுக்குள் சென்றதால் விளைநிலங்களில் இருந்த நெற்கதிர்கள்,பயிர்கள், 40 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் போன்றவை அதிக அளவில் அழிந்து சேதம் அடைந்தது.

இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் பொதுப்பணி துறை அதிகாரிகள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி பெரியாறு வைகை பாசன விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்

விவசாயிகள் சங்கத்தின் சார்பாக சங்கத்தின் தலைவர் மனோகரன் தலைமையில் விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து முல்லைப் பெரியாறு தடுப்பணைகளை சரி செய்து தர வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்

இதுகுறித்து பெரியாறு வைகை பாசன விவசாய சங்கத்தின் தலைவர் மனோகரன் கூறுகையில்
முல்லைப் பெரியாற்றில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக கம்பம் – சுருளிப்பட்டி பகுதியில் உள்ள மணற்படுகை கரை உடைந்து விவசாய நிலங்களுக்குள் ஆற்று நீர் புகுந்து 40 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள், உள்ளிட்ட விவசாய நிலங்கள் சேதமடைந்தது
இந்த நிலையில் விவசாய நிலத்தில் உரிமையாளர்கள் தங்களது சொந்த செலவில் 8 லட்சம் மதிப்பில் சேதம் அடைந்த கரைப்பகுதிகளில் உப்பு மூட்டைகளை அடுக்கி தடுப்புகளை ஏற்படுத்திய நிலையில் நீர் வரத்து அதிகரித்ததால் மணல் மூட்டைகளுக்கு மேல் தண்ணீர் சென்று வருகிறது
இந்த ஆற்றில் செல்லும் நீர் மூலம் 8,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெறுகின்றனர் இந்த நிலையில் கரை உடைந்து சேதம் ஏற்பட்டதால் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பயன்படுத்த முடியாமல் வீணாக சென்று வருகிறது
இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவதாகவும் விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்பீடுகளுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தியதாக தெரிவித்தனர்.




