அகமலை ஊராட்சியில் 400 விவசாய நிலங்களை அகற்ற வனத்துறை கொடுத்த நோட்டீஸ் சம்பந்தமாகவும், குடிநீர் குழாய் வசதி இருந்தும், மின் வசதி இருந்தும் வீடுகளுக்கு குடிநீர், மின்சார இணைப்பு கொடுக்க தடுக்கும் மற்றும் விவசாய விளைபொருட்களை வாகனத்தில் எடுத்துச்செல்ல அனுமதி மறுக்கும் வனத்துறை மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க கோரி உண்ணாவிரத போராட்டம்.
தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் தாலுகா, அகமலை ஊராட்சியில் 1000-த்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் உள்ள அகமலை, அண்ணாநகர், ஊரடி, ஊத்துக்காடு, கரும்பாறை, சொக்கன் அலை, பெரியமூங்கில், சின்னமூங்கில், பட்டூர், படப்பம்பாறை, சுப்பிரமணியபுரம், பேச்சியம்மன் சோலை, வாழைமரத்தொழு, எருமைதொழு, மருதையனூர், சூழ்துகாடு, அலங்காரம், கானமஞ்சி, டார்சை, முத்துக்கோம்பை, உலக்குரட்டி, கொத்தமல்லி காடு ஆகிய கிராம 400 விவசாயிகளுக்கு வனத்துறை மூலம் 15 நாட்களில் விவசாய நிலத்தில் இருந்து வெளியேற நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
நாங்கள் சுமார் 5 தலைமுறைகளாக காப்பி, ஏலம், எழுமிச்சை, மிளகு, அவகோடா, வாழை, பலா ஆகியவற்றை விவசாயம் செய்து வருகின்றோம். எங்களுக்கு வேறு தொழில் தெரியாது.
மேலும், வனத்துறையினர் விவசாய விளைபொருட்களை வாகனத்தில் எடுத்துச்செல்ல அனுமதி மறுத்து வருகின்றனர். ஏழை மக்களுக்கு குடிநீர் குழாய் அமைக்கவும் தடுத்து வருகின்றனர்.
மேலும், மின் வசதி இருந்தும் விடுகளுக்கு மின்சார இணைப்பு கொடுக்க தடுத்தும் வருகின்றனர். இதனால் அகமலை விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
மேலும் வனத்துறை மூலம் கொடுக்கப்படும் நோட்டீஸ் ஒவ்வொரு ஆண்டும் தொடர் நிகழ்வாக உள்ளது. வனத்துறை அப்புறப்படுத்தப்படும் முயற்சி நிரந்தரமாக நிறுத்தி வைத்தும், விவசாய விளைபொருட்களை வாகனத்தில் எடுத்துச்செல்ல அனுமதி மறுக்கும் வனத்துறை மீது தக்க துறைரீதியாக நடவடிக்கை எடுத்தும், வனத்துறை மூலம், இனி வரும் காலங்களில் அப்புறப்படுத்தும் நிகழ்வு நடக்காமல் நிரந்தர தீர்வு காணவும், வாழ்வாதாரத்தையும் காக்க உதவ வேண்டும் என என்ன வருது போராட்டம் இன்று நடைபெற்று வருகிறது.