மதுரை மாவட்டம் சோழவந்தான் சுற்றுவட்டார கிராமங்களான மேட்டுநீரேத்தான், கட்டக்குளம், ரிஷபம், ராயபுரம், திருவாளவாய நல்லூர், நெடுங்குளம், திருவேடகம் ஊத்துக்குளி, தென்கரை, மன்னாடி மங்கலம்,குருவித்துறை உள்ளிட்ட பகுதிகளில் நெற்கதிர் அறுவடை செய்யும் பணி இயந்திரம் மூலம் தீவிரமாக நடந்து வருகிறது. இதில் ஏக்கருக்கு 30 முதல் 45 மூடைவரை மகசூல் கிடைக்கிறது. மேலும் கதிர் அறுவடைக்குப் பின் இயந்திரம் மூலம் வயல்களில் வைக்கோல்களை சேகரித்து தனித்தனி கட்டுகளாக கட்டப்படுகிறது. 2 மணி நேரத்தில் ஏக்கருக்கு 30 முதல் 40 வைகோல்கட்டுகள் கட்டப்பட்டு ஒரு கட்டு ரூ.250க்கு விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. இந்த வைக்கோல்களை திண்டுக்கல்,திருச்சி,தேனி பகுதியில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்து வாங்கி செல்கின்றனர். “இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.