சென்னையில் அரசு மருத்துவருக்கு கத்தி குத்து சம்பவம் எதிரில் அரசு மருத்துவமனைகளில் இன்று முதல் சிகிச்சைகளை புறக்கணித்து போராட்டம் – தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவிப்பு.
சென்னையில் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த அரசு மருத்துவர் பாலாஜியை நோயாளிகளின் உறவினர்கள் கத்தியால்குத்தி காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விவகாரம் தமிழக முழுவதிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இன்று முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள் மருத்துவக் கல்லூரி, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், அவசரகால சிகிச்சை மற்றும் உயிர் பாதுகாப்பு சிகிச்சை தவிர்த்து அனைத்து சிகிச்சைகளையும் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அரசு மருத்துவர்கள் சங்க மாநில தலைவர் டாக்டர்.செந்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது..,
மாநில செயற்குழு முடிவின்படி அரசு மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டிய அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் உறவினர்களுக்கான கட்டுப்பாட்டை அதிகரிக்க வேண்டும் என கூறியும் காலவரையற்ற சிகிச்சை புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்தார்.