
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குப்பணம்பட்டியைச் சேர்ந்த சுருளி ஆண்டவர் என்ற விவசாயி தனது தோட்டத்தில் மோட்டரை இயக்க சென்ற போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி தாலுகா காவல் நிலைய போலீசார் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
