
வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில், விராலிப்பட்டி சி.புதூர் கிளை கழகங்களில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் சிறப்புரையாற்றினார்.
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட விராலிபட்டி சி புதூர் கிளைக் கழகங்களில் பூத்கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் மு.காளிதாஸ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ஆர். பி. உதயகுமார் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கி சிறப்புரையாற்றினார். இளைஞர் பாசறை மாவட்ட இணைச் செயலாளர் மு. கா. மணிமாறன் வரவேற்புரை ஆற்றினார். அமைப்புச் செயலாளர் மகேந்திரன் முன்னாள் எம்எல்ஏக்கள் எம். வி. கருப்பையா மாணிக்கம், வாடிப்பட்டி யூனியன் முன்னாள் தலைவர் ராஜேஷ் கண்ணா, ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வக்கீல் திருப்பதி, துரை தன்ராஜ், சிவசக்தி, புளியங்குளம் ராமகிருஷ்ணன், மகேந்திர பாண்டி, மகளிர் அணி லட்சுமி, குரு பார்த்திபன், ஆலயமணி ,ஜெயக்குமார், மலைச்சாமி வேல்சாமி, மணி மணிகண்டன், கிருஷ்ணசாமி, அழகர் முத்துசாமி, சந்திர போஸ், செந்தில், அழகுமலை, மூர்த்தி, யோகேஸ்வரன், விஸ்வநாதன், பெரிய கருப்பு, ராஜு குட்டி, வாவிடமருதூர் குமார், முடுவார் பட்டி ஜெயச்சந்திர மணியன், தென்கரை நாகமணி, கோட்டைமேடு பாலா, மதுசூதனன் உள்பட கிளைக் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பரந்தாமன் மற்றும் ஹரி நன்றி கூறினர்.

