தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள திருவேட்டல்லூர் பிள்ளையார் கோவில் கீழத் தெருவை சேர்ந்த அருணாச்சலம் இவருக்கு சண்முகராஜ் என்ற மகனும் காமேஸ்வரி, திருவாய் அம்மாள் என்ற 2 மகள்களும் உள்ளனர். திருமலை சாமிக்கு புளியங்குடி அய்யாபுரம் அருகேயுள்ள கல்குவாரி அருகே சுமார் 10 ஏக்கர் நிலம் உள்ளது. அதனால் அவர் அங்கேயே சென்று எப்போதும் தங்கி விடுவார் அதே போன்று நேற்று இரவு திருவேட்டநல்லூரில் இருந்து அய்யாபுரம் நோக்கி சென்றுள்ளார். அங்கு இரவில் தூங்கிக்கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத கும்பல் அவரை சரமாரியாக வெட்டியுள்ளனர். அதில் தலை சிதைக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே அருணாச்சலம் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். காலையில் அருகில் உள்ள வயல்களில் உள்ளவர்கள் சம்பவத்தை பார்த்து புளியங்குடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதனடிப்படையில் புளியங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தென்காசி செய்தியாளர் ஜெபராஜ்