• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

திருநங்கைகளுக்கு புத்தாடை வழங்கிய நடிகர் கார்த்திக் ரசிகர்கள்….

ByM.Bala murugan

Nov 10, 2023

நடிகர் கார்த்தி வித்தியாசமான ஜானர்களில் நடித்து வருகிறார். இவர் சினிமாவில் என்ட்ரி கொடுத்து 20 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் 25 படங்களில் மட்டுமே நடித்துள்ளார். அந்த அளவிற்கு தன்னுடைய கேரியரை நிதானமாக கையாண்டு வருகிறார். ஆயினும் கடந்த ஆண்டில் மட்டுமே இவரது நடிப்பில் 3 படங்கள் வெளியாகின. விருமன், பொன்னியின் செல்வன் மற்றும் சர்தார் என மூன்று படங்கள் அடுத்தடுத்து வெளியாகி ஹாட்ரிக் வெற்றியை கொடுத்தன.

இதனிடையே இந்த ஆண்டில் பொன்னியின் செல்வன் 2 படம் கடந்த ஏப்ரலில் வெளியானது. இதையடுத்து தீபாவளி கொண்டாட்டமாக கார்த்தியின் ஜப்பான் படம் நாளை ரிலீஸ் ஆக உள்ளது.

இந்நிலையில் மதுரையை சேர்ந்த நடிகர் கார்த்தி ரசிகர் மன்றத்தினர் நாளை வெளியாக உள்ள கார்த்தியின் 25வது படமான ஜப்பான் திரையிடப்பட உள்ள திரையரங்கில் 25 திருநங்கைகளுக்கும், முதியவர்களுக்கு தீபாவளி பரிசாக புத்தாடை மற்றும் இனிப்புகளை வழங்கினர். ஜப்பான் படம் வெளியாவதை முன்னிட்டு திருநங்கைகளுக்கு தீபாவளி புத்தாடை வாங்கி கொடுத்த கார்த்தியின் ரசிகர்களின் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.