இந்திய அளவில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக இருப்பவர் சன்னி லியோன். பாலிவுட் மற்றும் பல மொழிப்படங்களிலும் இவர் பிசியாக நடித்து வருகிறார்.
இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு! இந்நிலையில் படப்பிடிப்பின்போது சன்னி லியோனை பார்ப்பதற்காக ஓடிவந்த ரசிகர் ஒருவர், தன்னுடைய கையை காட்டியுள்ளார். அதில் சன்னி லியோனின் பெயர் டாட்டூவாக இருந்ததைக் கண்ட சன்னி லியோன் அவரிடம் நீண்ட நேரம் பேசியுள்ளார். மேலும் அந்த டாட்டூவை வீடியோவாக எடுத்து தன்னுடைய சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த டாட்டூ மிகவும் அற்புதமாக இருப்பதாகவும் மிக்க நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த ரசிகருக்கு அவர் ஒரு மெசேஜையும் தெரிவித்துள்ளார். அதில் நீங்கள் எப்போதும் என்னை காதலித்துக் கொண்டே இருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆனால் இப்போதைக்கு உங்களுக்கு வாய்ப்பு குறைவு என்றும் விரைவில் நல்ல மனைவியை கண்டுபிடியுங்கள் என்றும் குறும்புடன் தெரிவித்துள்ளார். இந்தப் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.