• Wed. Dec 11th, 2024

தாக்கப்பட்டாரா ப்ளு சட்டை மாறன்..

தமிழ் சினிமாவில் பிரபல திரைப்பட விமர்சகராக இருப்பவர் ப்ளூ சட்டை மாறன்.

சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான வலிமை படத்தையும் நன்றாக இல்லை என்று விமர்சனம் செய்து இருந்தார்.

வலிமை படத்தை பற்றிய விமர்சனத்தில் அஜித்தை உருவ கேலியும் செய்து இருந்தார். இதில் கடுப்பான அஜித் ரசிகர்களுக்கும், ப்ளூ சட்டை மாறனுக்கும் இடையே  இணையத்தில் பிரச்சினைகள் ஏற்பட்டன..

இந்நிலையில் நேற்று முதல் ப்ளூ சட்டை மாறனை யாரோ திரையரங்கில் வைத்து அடித்து விட்டனர் என்று செய்தி வெளியானது. அவர் திரையரங்கில் இருப்பது போன்று புகைப்படங்களும் வெளியானது. தற்போது இது முற்றிலும் பொய்யான தகவல் என்று ப்ளூ சட்டை மாறன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “தியேட்டர்னா நாலு பேர் பாக்க வருவாங்க. முடிஞ்சதும் வெளிய போவாங்க. அதை மறைஞ்சி நின்னு ஏன்டா போட்டோ எடுத்த? நேர்ல வந்து எடுத்து தொலைய வேண்டியதுதான? இதை ஷேர் பண்ணுற அளவுக்கு நான் செலப்ரிட்டி இல்ல. எப்படியோ…வைரல் பப்ளிசிட்டி தந்த அந்த தம்பிக்கு ரொம்ப நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.