• Thu. Oct 15th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

இசைஞானி நிகழ்ச்சியில் டிக்கெட்டை கிழித்தெறிந்த ரசிகர்..,

ByAnandakumar

May 2, 2025

ஸ்ரீ கோகுல் ஈவென்ட்ஸ் என்ற தனியார் நிறுவனம் சார்பில் கரூர் – திருச்சி பைபாஸ் சாலையில் அமைந்துள்ள கோடங்கிபட்டி பகுதியில் இசைஞானி இளையராஜாவின் இசை ராஜங்கம் என்ற இன்னிசை நிகழ்ச்சி திறந்த வெளி திடலில் நடைபெற்றது.

கரூர் மாவட்டத்தில் முதல்முறையாக நடைபெறும் இளையராஜாவின் இன்னிசை நிகழ்ச்சியை காண்பதற்கு 500 முதல் 50 ஆயிரம் வரை டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்தனர்.

கரூர் மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து ஏராளமான ரசிகர்கள் இன்னிசை நிகழ்ச்சியை காண்பதற்காக வருகை தந்தனர்.

இந்நிலையில் நிகழ்ச்சிக்கு சரியான முறையில் ஏற்பாடுகளை செய்யாததால் ஏராளமான பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

குறிப்பாக குறைந்த அளவு மட்டும் இருக்கைகளை வைத்துக்கொண்டு, டிக்கெட்களை அதிகம் விற்பனை செய்து உள்ளதாகவும், 3000 முதல் 5000 ரூபாய் டிக்கெட்டை வாங்கி உள்ளோம். ஆனால் எங்களை இசை நிகழ்ச்சியை காண உள்ளே விடவில்லை என ரசிகர்கள் சிலர் ஆவேசமாக கூறிவிட்டு நிகழ்ச்சியை பார்க்காமல் சென்று விட்டனர்.

இதேபோல் ஏராளமான பொதுமக்கள் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கியும், உட்கார இடம் இல்லை எனவும் காவல்துறையினர் கேவலமாக நடத்தியதாகவும் குற்றம் சாட்டினர். மூன்று மணி நேரமாக நின்று கொண்டே நிகழ்ச்சியை பார்த்த ரசிகர் ஒருவர் விரக்தியில் பாதியை வெளியே வந்ததோடு 3000 ரூபாய் பிளாட்டினம் டிக்கெட்டை கோபத்தில் கிழித்து வீசினார்.

இருக்கை நிரம்பிவிட்டதால் உள்ளே விடவில்லை என பொதுமக்களிடம் போலீசார் மற்றும் இசை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறிய நிலையில், பணம் கொடுத்து டிக்கெட் வாங்கினால் கூட உள்ளே ஏன் விடவில்லை என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அடிப்படை வசதியான குடிநீர் கூட இல்லை. 20 ரூபாய் தண்ணீர் பாட்டில் 40 ரூபாய்க்கும் 30 ரூபாய் கூல்ட்ரிங்ஸ் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது அதிர்ச்சி அளித்தது என்றனர்.