தமிழில் நான் மகான் அல்ல படத்திற்கு பின் முன்னணி நடிகையாக மாறிய காஜல் அகர்வால், மாற்றான், துப்பாக்கி, மாரி போன்ற படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவை கடந்தாண்டு காதல் திருமணம் செய்து கொண்டார்.
நடிகை காஜல் அகர்வால், திருமணத்துக்கு பிறகும் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தற்போது இவர் கைவசம் பாரிஸ் பாரிஸ், கோஸ்டி, ஹேய் சினாமிகா, கமலுடன் இந்தியன் 2, தெலுங்கில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஆச்சார்யா ஆகிய படங்கள் உள்ளன. மேலும் உமா என்கிற பாலிவுட் படத்திலும் காஜல் அகர்வால் நடித்து வருகிறார். காஜல் அகர்வால் தற்போது கர்ப்பமடைந்துள்ள தகவலை அவருடைய கணவர் கௌதம் கிச்சலு தெரிவித்துள்ளார். இவர்களுக்கு பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.