பிரபல திரைப்பட இயக்குநர் அமீரின் தாயார் பாத்து முத்து பீவீ உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருடைய இறுதிச் சடங்கு நாளை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் அமீர். மதுரையை சேர்ந்த இவர் பொருளியல் படித்துள்ளார் . 2022-ம் ஆண்டில் இயக்குநர் பாலாவிடம் உதவி இயக்குனராக திரைத்துறையில் நுழைந்த இவர், பின்னர் ‘மௌனம் பேசியதே’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.இதையடுத்து, ‘ராம்’, ‘பருத்திவீரன்’, ‘ஆதி பகவன்’, ‘பேரன்பு கொண்ட பெரியோர்களே’ உள்ளிட்ட வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களை இயக்கியுள்ளார்.இயக்குநராக மட்டுமல்லாமல் திரைப்படங்களிலும் நடித்து வரும் அமீர், டீம் ஒர்க் புரொடக்ஷன் ஹவுஸ் என்ற பெயரில் சொந்தப் பட தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.
இந்நிலையில், இயக்குநர் அமீரின் தாயார் பாத்துமுத்து பீவி வயது முதிர்வு காரணமாக இன்று காலமானார். அவரது உடல், மதுரை கே.கே.நகர் பகுதியில் உள்ள அமீரின் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.அவருடைய இறுதிச் சடங்கு நாளை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமீரின் தாயார் மறைவுக்கு திரை உலகை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.