• Mon. Jul 20th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

பாரிஸில் மாஸ் காட்டும் நடையில் நடிகர் அஜித்…வைரல் வீடியோ

Byகாயத்ரி

Jul 12, 2022

பாரிஸ் தெருக்களில் அஜித் குமார் நடந்து செல்லும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. ஏகே 61 படத்தின் ஸ்டைலில் இருக்கும் அஜித் சகாக்களுடன் தெருக்களில் ஸ்டைலாக நடந்து செல்லும் வீடியோ தான் அது.

பைக் ரேஸ், கார் ரேஸ் உள்ளிட்டவற்றில் மிகுந்த விருப்பம் கொண்ட அஜித். முன்னதாக ஐரோப்பிய நாடுகளின் தெருக்களில் சவாரி செய்த படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகியிருந்தன. படப்பிடிப்பிற்கு இடையே விடுமுறையில் உள்ள அஜய், ஓய்வெடுப்பதற்காக மற்ற நடிகர்களின் பாணியை பின்பற்றாமல் உலகை சுற்ற முடிவெடுத்துள்ளார். சமீபத்திய தகவலின் படி அல்டிமேட் ஸ்டார் தற்போது பிரான்சில் உள்ளார். இவரின் சமீபத்திய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் கோபுரம் அருகே அவர் உரையாடிய வீடியோக்கள் மற்றும் ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் செய்த புகைப்படங்கள் தீயாக பரவி வந்தன. இந்நிலைகள் பாரிஸ் தெருக்களில் அஜித் குமார் நடந்து செல்லும் வீடியோ ஒன்று தற்போது வைரல் ஆகி வருகிறது. ஏகே 61 படத்தின் ஸ்டைலில் இருக்கும் அஜித் சகாக்களுடன் தெருக்களில் ஸ்டைலாக நடந்து செல்லும் வீடியோ தான் அது.