• Sun. Sep 15th, 2024

சாலை விபத்தில் சிக்கிய பிரபல நடிகர்

ஹைதராபாத்தில் உள்ள புகழ்பெற்ற துர்காம்சேரு கேபிள் பாலத்தில் நடிகர் சாய் தரம் தேஜ் ஸ்போர்ட்ஸ் பைக்கில் சென்றபோது இந்த விபத்து நடந்தது. இந்த விபத்தில் சுயநினைவில்லாமல் இருந்த தரம் தேஜ் உடனடியாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு வலது கண், மார்பு மற்றும் அடிவயிற்றில் பலத்த காயங்கள் ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். விபத்து நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் மெகாஸ்டார் சிரஞ்சீவி, அவரது சகோதரரும் நடிகரும் அரசியல்வாதியுமான பவன் கல்யாண், தயாரிப்பாளர் அல்லு அரவிந்த், சாய் தரம் தேஜின் இளைய சகோதரர் வைஷ்ணவ் தேஜ் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்கள் மெடிகோவர் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர். நடிகர் சாய் தரம் தேஜ்ஸ், போர்ட்ஸ் பைக்கை அதிவேகமாக ஓட்டி வந்ததால் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவர் தனியாக பைக்கில் சென்றாரா? அல்லது வேறு குழுவினர் அவருடன் பைக்கில் சென்றனரா? என்பதை அறிய அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் வீடியோ காட்சிகளை சரிபார்த்து வருகிறோம் என்று மாதப்பூர் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *