2009ஆம் ஆண்டு நகுல், சுனைனா நடித்த ‘மாசிலாமணி’ மற்றும் நந்தா நடிப்பில் வெளியான ‘வேலூர் மாவட்டம்’ படத்தை இயக்கியவர் ஆர்.என்.ஆர்.மனோகர். இது தவிர ‘சலீம்’, ‘என்னை அறிந்தால்’, ‘நானும் ரவுடிதான்’, ‘வேதாளம்’, ‘மிருதன்’, ‘கைதி’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் ஆர்.என்.ஆர்.மனோகர் நடித்துள்ளார்.
இந்நிலையில் இன்று ஆர்.என்.ஆர்.மனோகர் சென்னையில் மாரடைப்பால் காலமானார். இவரது மறைவுக்குத் திரையுலக பிரபலங்கள் பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.