• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கருத்துக்கணிப்பை பொய்யாக்கி, இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் – துரை வைகோ பேட்டி

Byவிஷா

Jun 2, 2024

கருத்துக்கணிப்பை பொய்யாக்கி, இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் அலங்காநல்லூர் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ பேட்டி அளித்துள்ளார்.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே, தண்டலை ஊராட்சியில் மதிமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட செய்தியாளர்களை சந்தித்த மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ கூறியதாவது: தற்போது வெளியாகி வரும் கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கி இன்னும் 48 மணி நேரத்திற்குள் இந்தியா கூட்டணி இந்தியாவின் ஆளக்கூடிய கூட்டணியாக மாறும். கருத்துக்கணிப்பு என்பது நிரந்தரமானது அல்ல.
எனவே, கருத்துக்கணிப்புகள் பொய் ஆகும். தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை ஜனநாயக நாட்டில் உள்ள கட்சிகளை அளிப்பேன், இருக்காது என்று கூறக்கூடிய ஆணவ போக்கையும் சர்வாதிகார பேச்சையும் மாற்றிக் கொள்ள வேண்டும். அதேபோல், இந்தியா கூட்டணி தலைமையில் அமைய உள்ள அமைச்சரவையில் மதிமுக பங்கேற்காது.
மேலும், தமிழ்நாட்டில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் மூன்றாண்டு நல்லாட்சிக்கு தரக்கூடிய வெற்றியாக 39 தொகுதிகளில் இந்தியா கூட்டணி தலைமையிலான திமுக கூட்டணி 100 சதவீதம் வெற்றி பெறும். இவ்வாறு துரை வைகோ பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், மதிமுக மாவட்ட செயலாளர் மாநாடு உள்ளிட்ட மதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.